ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 7:00 am

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது.

மென்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 398 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 29.5 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

ஜேம்ஸ் வின்சி 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஜொனி பெயார்ஸ்டோ 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.

ஒய்ன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 102 பந்துகளில் 189 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

ஒய்ன் மோர்கன் 71 பந்துகளில் 17 சிக்ஸர்கள், பௌண்டரிகளுடன் 148 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய வீரராக ஒய்ன் மோர்கன் உலக சாதனை படைத்துள்ளார்.

ஜோ ரூட் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 362 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆறாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஆனாலும், மொயின் அலி 9 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியில் 25 சிக்ஸர்களை விளாசிய இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசி தனது சாதனையை புதுப்பித்துள்ளது.

மாபெரும் வெற்றி இலக்கான 398 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அணித்தலைவர் குலப்தின் நைய்ப் 37 ஓட்டங்களையும் ரஹ்மட் ஷா 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹஷ்முல்லா ஷஹிடி அரைச்சதமடித்து ஆப்கானிஸ்தான் அணி 200 ஓட்டங்களை எட்ட வழிவகுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்