by Staff Writer 18-06-2019 | 6:52 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியன, தற்போது வெவ்வேறாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதை சட்டமா அதிபருக்கு அறியக்கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த விசாரணைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கும் பிரதியொன்றுடன் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.