வறட்சியால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

தொடர் வறட்சியால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 18-06-2019 | 1:46 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 4,40,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களே வறட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் தற்போது மழைவீழ்ச்சி பதிவாகின்றபோதிலும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மழைக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மேல் மாகாணத்தில் வறட்சியால் 62000 பேரும் வட மாகாணத்தில் 1,90,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக மக்களின் அன்றாட நீர்ப்பாவனைக்கான கிணறுகள் மற்றும் குளங்கள் வற்றிப் போயுள்ளதுடன் இதனால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 1,52,936 பேர் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் வறட்சி காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் கள விஜயத்தில் ஈடுட்டுள்ளனர்.