by Staff Writer 18-06-2019 | 9:46 PM
Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய வீரராக இங்கிலாந்து அணித்தலைவரான ஒய்ன் மோர்கன் (Eoin Morgan) உலக சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
71 பந்துகளை எதிர்கொண்ட ஒய்ன் மோர்கன், 17 சிக்ஸர்களுடன் 148 ஓட்டங்களை விளாசினார்.
ஒய்ன் மோர்கன் - ஜோ ரூட் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 102 பந்துகளில் 189 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
ஜோ ரூட் 82 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜொனி பெயார்ஸ்டோ 99 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களைக் குவித்தது.
மென்செஸ்டர் ஓல்ட்ரெபட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக 25 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.
அதற்கமைய, சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய அணியாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது.