வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சீன ஜனாதிபதி

வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சீன ஜனாதிபதி

by Staff Writer 17-06-2019 | 7:48 PM
Colombo (News 1st) சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வட கொரியாவுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஸி ஜின்பிங்கின் விஜயம் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த 14 வருடங்களில் வட கொரியாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது சீன தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீன மற்றும் வட கொரிய தலைவர்களுக்கு இடையில் கொரிய தீபகற்பம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பிற்கிணங்க ஸி ஜின்பிங் வட கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கிடையிலான மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பியோங்யாங் தமது அணுசக்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்த ஜீ - 20 நாடுகளின் மாநாட்டைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பின்புலத்தில் சீன ஜனாதிபதியின் வட கொரிய விஜயம் கொரிய தீபகற்பத்தில் இடம்பெறக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.