ராவணா – 1 விண்வௌியில் சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளது

ராவணா – 1 செய்மதி விண்வௌியில் சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளது

by Staff Writer 17-06-2019 | 7:00 PM
Colombo (News 1st) இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா - 1 செய்மதி இன்று (17ஆம் திகதி) விண்வௌியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் இருவர் இணைந்து தயாரித்துள்ள இந்த செய்மதி இன்று பிற்பகல் 3.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராவணா - 1 செய்மதியை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிந்து தயாரத்ன, தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவன பட்டதாரியான துலானி சாமிகா விதானகே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜப்பானின் கியூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தின் விண்வௌி பொறியியல் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் இந்த செய்மதியை நிர்மாணித்துள்ளனர். நாஸா நிறுவனத்துக்கு சொந்தமான அமெரிக்காவின் வேர்ஜினியாவிலுள்ள மத்திய அத்திலாந்திக் பிராந்திய விண்வௌி ஏவு மையத்திலிருந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி ராவணா - 1 செய்மதி விண்வௌிக்கு என்டரேஸ் ரொகட்டின் துணையுடன் ஏவப்பட்டது. ஏப்ரல் 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு அது சர்வதேச விண்வௌி மையத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.