ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2019 | 5:41 pm

Colombo (News 1st) ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட குற்றவாளிக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (17ஆம் திகதி) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – வாழைத்தோட்டத்தை சேர்ந்த 35 வயதான ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4.3 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 6 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்