மாகாணசபைத் தேர்தலை விரைவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை

மாகாணசபைத் தேர்தலை விரைவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை

மாகாணசபைத் தேர்தலை விரைவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2019 | 5:27 pm

Colombo (News 1st) கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்துமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (17ஆம் திகதி) தீர்மானித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுக்களின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்குத் தீர்மானித்த நீதியரசர்கள் குழாம் மனுக்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்