நியூஸிலாந்தில் இரண்டு விமானங்கள் மோதின – விமானிகள் பலி

நியூஸிலாந்தில் இரண்டு விமானங்கள் மோதின – விமானிகள் பலி

நியூஸிலாந்தில் இரண்டு விமானங்கள் மோதின – விமானிகள் பலி

எழுத்தாளர் Fazlullah Mubarak

17 Jun, 2019 | 9:30 am

நியூஸிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் விமானங்களை  செலுத்திய விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு விமானங்களும் மோதியதில் விமானங்கள் இரண்டும் தீப்பற்றியுள்ளன.

விபத்து இடம்பெறும்போது 2 விமானங்களிலும் விமானிகள் மாத்திரமே இருந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை என்பதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்