by Fazlullah Mubarak 17-06-2019 | 9:16 AM
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள விசேட தெரிவுக்குழு அமர்வினபோது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழு தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தம்மிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் ஒரு அமைப்புக்கும் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகரும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் தலவைருமான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
பகிரங்கமாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்த பிரதி சபாநாயகர், சிலவேளை இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சைகள் இல்லை என தெரிவித்த தெரிவிக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அதிகாரிகள் அழைக்கப்படுவதற்காக பெயர்ப்பட்டியலின்படி இது தொடர்பில் எதிர்காலத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.