ஜனாதிபதி, பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்திகள்

பொசன் பூரணை இன்று: ஜனாதிபதி, பிரதமரின் வாழ்த்துச் செய்திகள்

by Staff Writer 16-06-2019 | 7:43 AM
Colombo (News 1st) பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர். பொசன் பௌர்ணமி தினத்தன்று நாம் பெற்ற இந்த உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமான கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்தவேண்டிய தருணம் இதுவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக அமைய வேண்டியதும் அதுவேயாகும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஆத்மீக மலர்ச்சியையும் வளமான கலாசாரத்யைும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அதற்கான ஆற்றலும் அறிவும் கிட்டும் பொசன் பௌர்ணமி தினமாக இன்றைய தினம் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தனது வாழ்த்துச செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த உயரிய பொசன் பூரணை தினத்தில் உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீவிரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளிப்புறச் சடங்குகள் மூலமன்றி தர்மத்தின் உண்மையான மையக் கருத்தினைக் கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக் கொள்வோம் எனவும் பிரதமர் தனது பொசன் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டும் என இந்த உயரிய பொசன் தினத்தில் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.