நியூஸிலாந்தைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Staff Writer 16-06-2019 | 11:26 AM
Colombo (News 1st) நியூஸிலாந்தின் தீவொன்றில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் குறிப்பிட்ட சில கரையோரப்பகுதிகளின் கடல் மட்டத்தில் மாத்திரம் சிறியளவிலான மாற்றம் ஏற்படும் என, பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நியூஸிலாந்தின் குன்குரு (Ngunguru) தீவிற்கு வடகிழக்காக 873 கிலோமீற்றர் தூரத்தில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையினை நியூஸிலாந்து அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர். மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் வௌியாகவில்லை என்பதுடன், குறித்த தீவில் நிரந்தரக்குடியிருப்புக்கள் எவையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.