சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-06-2019 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஆசியாவின் பலத்தை வீழ்த்துவதற்கு எந்தவொரு வௌிநாட்டு சக்திகளுக்கும் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 02. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவின் உறுப்பினரான அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் என்பவர் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக INTERPOL அறிவித்துள்ளது. 03. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 8 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 04. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியதன் பின்னர், நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் வௌியிடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 05 கம்பஹாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 06. அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது சபையில் ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. S400 ரக ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிற்கு அறிவித்துள்ளனர். 02. அமெரிக்க ஜனாதிபதியின் வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. 75ஆவது பிரெட்பி கேடயத்தை கொழும்பு ரோயல் கல்லூரி அணி சுவீகரித்துள்ளது. 02. 51 அடி நீளம், 6.6 தொன் எடையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.