அமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வைவிதிக்கும் இந்தியா

அமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வை விதிக்கும் இந்தியா

by Staff Writer 16-06-2019 | 9:06 AM
Colombo (News 1st) இன்றைய தினத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 உற்பத்திகளுக்கான தீர்வைகளை விதிக்கவுள்ளதாக, இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் உயர் தீர்வைகளை நீக்குமாறு விடுக்கப்பட்ட இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவினால் விதிக்கப்படும் அமெரிக்க இறக்குமதிகள் மீதான இந்தப் புதிய தீர்வைகளில் சில 70 வீதத்திற்கும் அதிகமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த 28 வகை உற்பத்திகளில் பாதாம், அப்பிள் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்குகின்றன. கடந்த ஆண்டு ஜூனில் அமெரிக்க உற்பத்திகள் மீது 120 வீதம் வரையான தீர்வைகளை விதிப்பதாக இந்தியா அறிவித்திருந்த போதிலும், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், சமச்சீரற்ற வர்த்தகம் காரணமாக இந்தியாவின் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையிலிருந்து வௌியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.