75 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது கொழும்பு ரோயல் கல்லூரி

75 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது கொழும்பு ரோயல் கல்லூரி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2019 | 8:30 pm

Colombo (News 1st) 75 ஆவது பிரெட்பி கேடயத்தை கொழும்பு ரோயல் கல்லூரி அணி சுவீகரித்தது.

கொழும்பு ரோயல் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி அணிகளுக்கிடையிலான பிரெட்பி கேடய வருடாந்த ரக்பி போட்டி இரண்டு கட்டங்களைக் கொண்டதாகும்.

இதன் முதற்கட்டம் கண்டி – பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்றதுடன், அதில் 34 – 17 எனும் புள்ளிகள் கணக்கில் ரோயல் கல்லூரி அணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்டம் கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில் முதல் பகுதியில் 12 – 3 எனும் புள்ளிகள் கணக்கில் திரித்துவக் கல்லூரி அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பகுதியில் திரித்துவ அணி மேலும் 12 புள்ளிகளைக் கைப்பற்ற ரோயல் அணியால் 10 புள்ளிகளையே பெற முடிந்தது.

அதற்கமைய, இரண்டாம் கட்டம் 24 – 13 எனும் புள்ளிகள் கணக்கில் திரித்துவ அணி வசமானது.

எவ்வாறாயினும், இரண்டு கட்டங்களின் முடிவில் 47 – 41 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றிவாகை சூடியது

அதன்படி, 75 ஆவது பிரெட்பி கேடயத்தை ரோயல் கல்லூரி அணி கைப்பற்றியது. இது ரோயல் கல்லூரி அணி பிரெட்பி கேடயத்தை வென்ற 34 ஆவது சந்தர்ப்பமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்