பரீட்சை தரப்படுத்தல்கள் வௌியிடப்பட மாட்டாது

புலமைப்பரிசில், சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் வௌியிடப்பட மாட்டாது: கல்வி அமைச்சர்

by Bella Dalima 15-06-2019 | 4:10 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியதன் பின்னர், நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் (Island’s Best Rankings) வௌியிடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரா, இல்லையா என்பது குறித்து மாத்திரம் பெறுபேறுகளில் குறிப்பிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். போட்டித்தன்மையற்ற தடைதாண்டல் பரீட்சையாக இவற்றை நடத்த திட்டமிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.