ஆசியாவின் பலத்தை வீழ்த்த வௌிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது: தஜிகிஸ்தானில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 15-06-2019 | 5:19 PM
Colombo (News 1st) ஆசியாவின் பலத்தை வீழ்த்துவதற்கு எந்தவொரு வௌிநாட்டு சக்திகளுக்கும் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறும் ஆசிய நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான 5 ஆவது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி டையிப் ஏர்டோகன் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி ஆகியோரின் பங்கேற்புடன் இன்றைய மாநாடு ஆரம்பமானது. ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழித்து, சமாதானம் மற்றும் பொருளாதார சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து ஆசிய நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்