11 இளைஞர்கள் கடத்தல்: சந்தேகநபருக்கு பிணை

11 இளைஞர்கள் கடத்தல்: 11 ஆவது சந்தேகநபருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

by Staff Writer 14-06-2019 | 3:33 PM
Colombo (News 1st) 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 11 ஆவது சந்தேகநபருக்கு கடும் நிபந்தனைகளுடன் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் 11 ஆவது சந்தேகநபரான கடற்படையின் சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெத்திகே முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 11 ஆவது சந்தேகநபருக்கு தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளும் ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரின் வௌிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். பிணையில் சென்றதன் பின்னர் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தக்கூடாது எனவும் சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெத்திகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்