40,000ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுப்பு

ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுப்பு

by Bella Dalima 14-06-2019 | 4:47 PM
ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றிலிருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சிபேரியாவிற்கு உட்பட்ட பகுதியில் Yakutia என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. ஆர்ட்டிக் பனி பிரதேசத்தினை அருகாமையில் கொண்டுள்ள அப்பகுதியில் Tirekhtyakh என்ற ஆறு ஓடுகிறது. இந்த Yakutia பகுதியினை சேர்ந்த பவேல் என்ற நபர் Tirekhtyakh ஆற்றின் கரையிலிருந்து பனி ஓநாயின் தலை ஒன்றினை கண்டெடுத்தார். ஓநாயின் தலை மிகவும் வித்தியாசமான உருவ அமைப்பினைக் கொண்டிருந்ததால் அதனை யாகுடாவில் உள்ள அறிவியல் ஆராய்சி மையத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். அந்த ஓநாயின் தலையினை ஆய்வு செய்த Yakutia-வில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக ஜப்பான் மற்றும் ஸ்வீடன் நாட்டில் உள்ள சக ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அதன் மாதிரிகளை அனுப்பி வைத்தனர். ஜப்பான் மற்றும் ஸ்வீடன் நாட்டின் ஆராச்சியாளர்கள் ஓநாயின் தலையின் மாதிரிகளை ஆராய்ந்ததில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி ஒநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர். மேலும், பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உரைந்துள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.