by Bella Dalima 14-06-2019 | 6:34 PM
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளனர். 350,000 பேர் தமது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், 9300 வீடுகளும் 3.71 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கினால் 13.35 பில்லியன் யுவான் (1.93 பில்லியன் டொலர்) நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வௌ்ளத்தில் சிக்குண்ட 4,300 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.