கிர்கிஸ்தானில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆரம்பம்

கிர்கிஸ்தானில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆரம்பம்

by Staff Writer 14-06-2019 | 9:27 PM
சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் அரச தலைவர்களின் தலைமையில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பமாகியது. கிர்கிஸ்தானில் இம்மாநாடு நடைபெறுகின்றது. வலய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் விஸ்தரிப்பதும் வலுப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது இணக்கப்பாடு காணப்படும் ஒப்பந்தங்களை கைச்சாத்திடவுள்ளதுடன், வலய ரீதியில் இருதரப்பு முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன் முக்கிய உறுப்பு நாடுகளாக சீனா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2017 ஆம் ஆண்டு இதில் இணைந்து கொண்டன. இந்த மாநாட்டில் வலய ரீதியில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படவுள்ளது.