மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட தொல்பொருட்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2019 | 4:06 pm

Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் பெறப்பட்ட அமெரிக்காவின் கார்பன் கால நிர்ணய அறிக்கையின் பிரகாரம் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

அகழ்வுப் பணிகளின் போது 355 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்