போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் கடற்படையிடம் கோரிக்கை

போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் கடற்படையிடம் கோரிக்கை

போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் கடற்படையிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2019 | 3:56 pm

Colombo (News 1st) வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இன்று சந்தித்த போதே வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்