துபாயில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் ஐவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

துபாயில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் ஐவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2019 | 3:49 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபரான மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்