by Chandrasekaram Chandravadani 13-06-2019 | 2:59 PM
இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள 2100 விவசாயிகளின் வங்கிக் கடனுக்கான தொகையை பொலிவூட் நடிகரான அமிதாப் பச்சன் வழங்கியுள்ளார்.
பீஹாரிலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாம் பெற்ற வங்கிக்கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
இதனிடையே, குறித் விவசாயிகளின் கடனை அடைக்கப்போவதாக அமிதாப் பச்சன் அண்மையில் டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, 2100 விவசாயிகளைத் தெரிவுசெய்து அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்கள் பெற்றிருந்த கடன்தொகையை தனது மகன் மற்றும் மகள் மூலம் ஒப்படைத்துள்ளார்.
இதன் பின்னர், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. பீஹாரில் 2100 விவசாயிகளின் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின்போது வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அமிதாப் பச்சன் உறுதியளித்துள்ளார்.