பிரதமர் சிங்கப்பூர் பயணம்: நீதி அமைச்சரை சந்தித்தார்

பிரதமர் சிங்கப்பூர் பயணம்: நீதி அமைச்சரை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 8:15 pm

Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (12) பிற்பகல் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு AUS 308 இலக்க விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிங்கப்பூரின் நீதி அமைச்சர் கே.சண்முகனை பிரதமர் இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்கப்பூரின் வௌிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் நிரந்தரமற்ற உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்