by Staff Writer 13-06-2019 | 7:00 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி, புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டவுன்ட்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
அவுஸ்திரேலியா சார்பாக எரன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் முதலில் களமிறங்கினர்.
23ஆவது அரைச்சதத்தை பூர்த்திசெய்த எரன் பின்ச், 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
எரன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.
டேவிட் வோர்னர் 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்து 107 ஓட்டங்களை குவித்தார்.
அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களுக்குள் இறுதி 4 விக்கெட்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் மொஹமட் அமீர் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 2 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை முதல் விக்கெட்டை இழந்தது.
பாகிஸ்தான் சார்பில் அதிகூடிய ஓட்டங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் 53 ஓட்டங்களை பெற்றார்.
பாகிஸ்தான் அணி 2 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்ததது.
பெட் கமின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்ச்சல் ஸ்டார்க் மற்றும் ரிச்சட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.