பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐவர் விடுதலை

பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐவர் விடுதலை

பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐவர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 11:35 am

Colombo (News 1st) பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 26ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பிராந்தியத்திலிருந்து குறித்த மீனவர்கள், கடற்றொழிலுக்கு சென்றிருந்தபோதே, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீனவர்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்புவார்கள் என, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒரு வாரத்தில் மீனவர்களின் படகும் விடுவிக்கப்படும் எனவும் கடற்றொழில் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்