by Staff Writer 13-06-2019 | 1:10 PM
Colombo (News 1st) தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சினால் புதிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை புதிய தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாக இராணுவ ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட சிசிர மென்டிஸ், சுகயீனம் காரணமாக தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, 1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை காலாற்படையில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.