ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தானுக்கு பயணம்

ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தானுக்கு பயணம்

by Staff Writer 13-06-2019 | 7:41 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13ஆம் திகதி) முற்பகல் தஜிகிஸ்தான் நோக்கி பயணமானார். ஆசிய பிராந்தியத்தின் நடவடிக்கைள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், நடைபெறவுள்ள 5ஆவது மாநாட்டிலேயே ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் ஜனாதிபதி இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் 26 நாடுகள் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கொரியா உள்ளிட்ட நாடுகளும் உள்ளடங்குகின்றன. 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை இந்த மாநாட்டின் உறுப்பு நாடாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோன் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.