சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 9:09 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில்
நடைபெற்றது.

சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கான வீட்டுத்திட்டம் மட்டக்களப்பு –
சத்துருகொண்டான் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 22 உறவினர்களுக்காக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்