கொழும்பு – கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று

கொழும்பு – கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 7:34 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13ஆம் திகதி) இடம்பெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்தத் தடவை திருவிழா இடம்பெறவுள்ளது.

கொச்சிக்கிடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 185ஆவது ஆண்டு திருவிழா இந்தத் தடவை விமரிசையாக நடைபெற மாட்டாது என திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தத் தடவை திருவிழாவில் கொடியேற்றம், திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று (12ஆம் திகதி) மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஆராதனையில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்