கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 11:20 am

Colombo (News 1st) கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (13ஆம் திகதி) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்