உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் 5 இடங்கள் பின்தங்கிய இலங்கை

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் 5 இடங்கள் பின்தங்கிய இலங்கை

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் 5 இடங்கள் பின்தங்கிய இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

13 Jun, 2019 | 5:01 pm

Colombo (News 1st) உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இவ்வாண்டு 5 இடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது.

அண்டை நாடான இந்தியா இந்தப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகள், நாட்டில் இராணுவத்தின் செயற்பாடு ஆகியவற்றை அளவீடுகளாகக் கொண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

ஆய்வின் முடிவில் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் கடைசி 5 நாடுகள் வரிசையில், தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தப் பட்டியலில் பூட்டான் 15-ஆவது இடத்தைப் பிடித்து, தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக உள்ளது.

நேபாளம், 76-ஆவது இடத்தையும், வங்கதேசம், 101-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 153-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்