இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் – போக்குவரத்து அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் – போக்குவரத்து அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் – போக்குவரத்து அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 1:00 pm

Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஊழியர்களுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நடைபெறுகின்றது.

போக்குவரத்து அமைச்சருடன், நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

தமது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பினால் 40க்கும் அதிகமான டிப்போக்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்