18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானம்

18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானம்

18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 7:54 am

Colombo (News 1st) அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளை இன்று (13ஆம் திகதி) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு, வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசன் பூரணையை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், சுவர்ணபாலி தேசிய பாடசாலை, ஶ்ரீமத் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், புனித ஜோசப் மகா வித்தியாலயம், விவேகானந்தா மகா வித்தியாலயம், சாஹிரா மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், தேவநம்பியதிஸ்ஸ மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

மேலும், கலென்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் கம்மலக்குளம் வித்தியாலயம் ஆகியன மூடப்படவுள்ளன.

குறித்த பாடசாலைகள், எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்