குஜராத்தில் நாளை காலை கரையைக்கடக்கவுள்ள வாயு புயல்

குஜராத்தில் நாளை காலை கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்

by Bella Dalima 12-06-2019 | 3:55 PM
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தீவிர புயலாக உருமாறி ''வாயு'' புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாயு புயல் குஜராத்தில் வியாழக்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குஜராத்தின் துவரகா, சோம்நாத், சசன், கட்ச் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகள் அனைவரும் ஜூன் 12 ஆம் திகதி நண்பகலுக்கு மேல் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா கடலோரப் பகுதிகளுக்கிடையே வியாழக்கிழமை (13) அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.