இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

இன்று முதல் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

by Staff Writer 12-06-2019 | 11:09 AM
Colombo (News 1st) நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று (12ஆம் திகதி) முதல் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதால் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு குடம்பிகள் பரவும் வகையிலான சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழலைத் துப்புரவுசெய்து அது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மற்றும் நாளைய தினங்களில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.