ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2019 | 12:05 pm

Colombo (News 1st) ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

முகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சந்தேகநபர்களை சீனாவிற்கு அனுப்பும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பொலிஸாரும் இணைந்து கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு தாமதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்