இலங்கைக்கான எயார் இந்திய விமான சேவைகள் மீள ஆரம்பம்

இலங்கைக்கான எயார் இந்திய விமான சேவைகள் மீள ஆரம்பம்

இலங்கைக்கான எயார் இந்திய விமான சேவைகள் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2019 | 5:34 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த எயார் இந்திய விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கும் கொழும்பிற்கும் இடையில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அமைச்சர் ஹர்திப் சிங்பூரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்