தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

by Staff Writer 11-06-2019 | 7:24 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாவிட்டால், அமைச்சரவை இரத்து செய்யப்பட்டதாக அர்த்தப்படாது என ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், பெரும்பான்மையுள்ள தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற அனுமதிக்கு அமையவே தம்மால் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் விரக்தியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், பாராளுமன்றத்திலுள்ள 225 பேரையும் பதவி விலக்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறினாலும் அதற்குரிய நேரம் இதுவல்ல எனவும் தெரிவித்துள்ளார். அந்த நிலையை மாற்றுவதாயின், அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்குள்ள விரக்தியை நீக்கும் பொருட்டு செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.