இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

by Staff Writer 11-06-2019 | 2:03 PM
Colombo (News 1st) இந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஸ்ரேலிங் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.5 வீதத்தாலும் ஜப்பான் யென்னின் பெறுமதி 1.7 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இதேவேளை, யூரோவின் பெறுமதி 5.1 வீதத்தினாலும் இந்திய ரூபா 2.4 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.