ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2019 | 3:53 pm

Colombo (News 1st) கொழும்பு – ஹட்டன் வீதியில் யட்டியாந்தோட்டை பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

யட்டியாந்தோட்டை நகரிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நிலம் தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு நிலம் தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு – ஹட்டன் பழைய வீதியில் யட்டியாந்தோட்டை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள விகாரையூடாக சமன் தேவாலயம் வரை பயணிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்