ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2019 | 5:28 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைப்பாளர்கள் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்போது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்