by Staff Writer 10-06-2019 | 8:59 PM
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஸிவ் அலி ஸர்தாரி (Asif Ali Zardari) நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் அந்நாட்டு ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மில்லியன் ரூபா ஊழல் வழக்கில் அவர் முன்வைத்த பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து சில மணித்தியாலங்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவருடைய சகோதரியும் கைது செய்யப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஸிவ் அலி ஸர்தாரி தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதுடன் அவருடைய சகோதரி அரசியல்வாதியாக செயற்படுகின்றார்.
இந்நிலையில், பல மில்லியன் ரூபா ஊழல் மோசடியுடன் இவர்கள் இருவரும் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அஸிவ் அலி ஸர்தாரியின் மனைவியும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், இவர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.