பதில் அமைச்சர்கள் நியமனம்

by Fazlullah Mubarak 10-06-2019 | 11:14 AM

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்றுநேரத்திற்கு முன்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இதேவேளை, இராஜினாமா செய்த ரவூப் ஹக்கீமின் பொறுப்பிலிருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கபீர் ஹாஷிமின் பொறுப்பிலிருந்த அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே பதவியேற்றுள்ளார்.