நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Jun, 2019 | 3:30 pm

Colombo (News 1st) தென்னிந்தியாவின் நகைச்சுவை நடிகரும் வசனகர்த்தா மற்றும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் (Crazy Mohan) 66 வயதில் சென்னையில் இன்று (10ஆம் திகதி) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் மாரடைப்பினால் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமாகியுள்ளார்.

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயரைக் கொண்ட கிரேஸி மோகன், சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவராவார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், வசூல்ராஜா MBBS உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய இவர், 50க்கும் அதிக திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அத்தோடு, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இதேவேளை, தினமொரு வெண்பா எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கிரேஸி மோகன், 40,000க்கும் அதிக வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பினால் இன்று காலமானார்.

இதேவேளை, புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் நடிகரும் புத்திஜீவியுமான கிரிஷ் கார்னன்ட் (Girish Karnad) தனது 81ஆவது வயதில் இன்று (10ஆம் திகதி) காலமானார்.

உடல் நலக்குறைவினால் இன்று காலை பெங்களூரில் அவர் காலமானார்.

இலக்கியத்துறையில் ஆற்றிய சேவைக்காக பத்மஶ்ரீ, பத்மபூசன் மற்றும் ஜான்பித் உள்ளிட்ட பல விருதுகளை Girish Karnad வென்றுள்ளார்.

அத்துடன், திரைப்படத்துறையில் பல பிரிவுகளிலும் அவர் 10 தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்