காஷ்மீர் சிறுமி கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகளாக அறிவிப்பு

காஷ்மீர் சிறுமி கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகளாக அறிவிப்பு

காஷ்மீர் சிறுமி கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகளாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2019 | 8:52 pm

காஷ்மீரில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு பதான்கோட் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த 6 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றவாளிகளில் மூவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் மேலும் மூவருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகள் சாட்சிகளை அழித்தமைக்காக 201ஆம் சட்டத்தின்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் கதூவா கிராமத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி காணாமல் போன சிறுமி ஒரு வாரத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தி, சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கத்துவா சிறுமியின் கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் அதிக காலம் உயர்நீதிமன்றத்தில் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

வழக்கில் 114 பேர் சாட்சியம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்