சாய்ந்தமருது தாக்குதல்: DNA அறிக்கை அடுத்தவாரம்

சாய்ந்தமருது குண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் DNA அறிக்கை அடுத்தவாரம்

by Staff Writer 09-06-2019 | 7:55 AM
Colombo (News 1st) கல்முனை - சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கையை அடுத்த வாரம் வௌியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்களிலிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள் பழுதடைந்தமையால், புதிய மாதிரிகளை பெறுவதற்காக சடலங்கள் மீண்டும் தோண்டப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த மாதிரிகள், நேற்று முன்தினம் சட்ட வைத்திய அதிகாரிகளூடாக அரச இரசாயனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய சஹ்ரானின் உறவினர்களை இந்த மரபணு பரிசோதனை அறிக்கையினூடாக அறிந்து கொள்ள முடியும் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்