பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளமூடாக வழங்க நடவடிக்கை

பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளமூடாக வழங்க நடவடிக்கை

பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளமூடாக வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2019 | 11:42 am

Colombo (News 1st) பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதராமல் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கான மாணவர்கள் தமது கடனட்டை அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்றுச்சீட்டு இலக்கத்துடன், இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதனையடுத்து, குறித்த சான்றிதழை விரைவுத்தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வௌிநாட்டிலுள்ள இலங்கைப் பிரஜைகளின் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை ஒன்லைன் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்